என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் கொலை"
பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவர் ராஜா, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, கால்வாய் கரை வழியாக தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ராஜாவின் உடலை சுற்றி அமர்ந்து கதறி துடித்தனர். சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து வந்து கொலையான ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் ராஜாவின் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவரது உடலை ஏற்ற வந்த ஆம்புலன்ஸ் வேனையும் முற்றுகையிட்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், சேரன்மகாதேவி உதவி சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை எடுத்து வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து கொலை செய்யப்பட்ட மாணவர் ராஜா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பொதுமக்களும் மறியல் போராட்டத்தை கைவிட்டதால், போக்குவரத்து சீரானது.
கொலையாளிகளை கைது செய்ய முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும்போது, ராஜாவும் அவரது நண்பர்களும் பூக்களை வீதியில் வீசி சென்றனர்.
அப்போது மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் பூ விழுந்துள்ளது. அந்த பூக்களை வேண்டும் என்றே வீசியதாக 2 தரப்பினரும் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.
உடனடியாக இருதரப்பு பெரியவர்களும் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்த பிரச்சினை காரணமாக ராஜாவை, மற்றொரு தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்று அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்றும், அவர்கள் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த பிரச்சினை காரணமாக முன்னீர்பள்ளம் பகுதியில் இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் வாளையாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு அதே பகுதியில் ஒரு சந்தில் நண்பர்களுடன் மது குடித்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர் ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து விஷ்ணுவின் கழுத்தில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் விஷ்ணுவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் விபத்து என்று கூறி இரவு 1 மணிக்கு சேர்த்து விட்டு மாயமானார்கள். ஆஸ்பத்திரியில் விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.
விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயம் குறித்து டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அவர்கள் போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஷ்ணுவின் நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாய்த்தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் விஷ்ணுவின் கழுத்தில் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி.
இவரது மகன் முரளிதரன் (வயது 19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பாலாஜி(24) என்பவருக்கும் இடையே பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. டிப்ளமோ படித்துள்ள பாலாஜி கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு முரளிதரன் மற்றும் அவரது நண்பர்கள் நவின்பிரபு, பிரசாத் ஆகியோர் கெம்பட்டிகாலனியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு வந்த பாலாஜிக்கும், முரளிதரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளிதரனின் மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடினார்.
ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த முரளிதரனை நண்பர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
கொலை குறித்து தகவல் அறிந்ததும் பெரியகடைவீதி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய பாலாஜியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான பாலாஜியும் பிளஸ்-1 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாலாஜியுடன் பழகுவதை மாணவி நிறுத்தி விட்டார். அதன்பிறகு முரளிதரனின் நண்பர் ஒருவருடன் மாணவி பேசி பழகி வந்துள்ளார். கடந்த 23-ந்தேதி மாணவியின் பிறந்த நாளையொட்டி அந்த வாலிபர் மற்றும் முரளிதரன் ஆகியோர் மாணவியின் வீடு அருகே சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கும்பலாக சேர்ந்து முரளிதரன் மற்றும் அவரது நண்பரை சூழ்ந்து கொண்டு எங்கள் பகுதிக்கு நீங்கள் எப்படி வரலாம்? என கூறி தகராறு செய்துள்ளனர். கும்பலில் இருந்த பாலாஜி, நான் காதலித்த பெண்ணுடன் நீங்கள் எப்படி பேசலாம்? என கூறி இருவரையும் கண்டித்துள்ளார். அங்கிருந்து ஒருவழியாக முரளிதரன் தப்பி சென்றார்.
இச்சம்பவத்தில் முரளிதரனுக்கும், பாலாஜிக்கும் விரோதம் உருவாகியது. நேற்று இரவு வேலை முடிந்து பாலாஜி வீட்டுக்கு நடந்து சென்ற போது அவரை முரளிதரனும், நண்பர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். இதில் ஆவேசமடைந்து அவர் முரளிதரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
பாலாஜி கூறிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சாகுல்ஹமீது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவனியாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்.
முன்தசீரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் முன்தசீரின் நண்பர்களிடமும் அவருக்கு யாரேனும் விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder
கொடைரோடு:
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் புரோட்டா கடை வைத்துள்ளார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 21). மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். இவருடன் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி (21), ஆலங்குளத்தைச் சேர்ந்த நாகசூர்யா (21), செல்லூரைச் சேர்ந்த கேசவமூர்த்தி (22) ஆகியோரும் சென்றனர்.
4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் கோவைக்கு சென்று விட்டு நேற்று இரவு மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு 4 பேரும் இறங்கினர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் அங்கே இறங்கி தகராறு செய்தனர். தகராறு முற்றவே கத்தியால் அந்த கும்பல் அவர்களை மிரட்டியது. இதனால் மோகன்ராஜ் தரப்பினர் தப்பி ஓட முயன்றனர்.
அந்த சமயத்தில் மோகன் ராஜ் தவறி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் வந்த வாலிபர்களிடம் கொலையாளிகள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை கொலையாளிகள் பின் தொடர்ந்து வந்து இதனை செய்திருப்பதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது காதல் பிரச்சினை காரணமாக நடந்ததா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர் ராஜேஷ் வந்து முக்கிய தடயங்களை பதிவு செய்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்